புதன், 3 பிப்ரவரி, 2010

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

உன்னோடு நானும் என்னோடு நீயும்

உன்னோடு நானும்
என்னோடு நீயும்
சேரும் நாட்களுக்கு
காத்திருக்க
வேண்டியதில்லை॥

செந்நிற அழகை
அந்த நிலத்தில்
பெய்யப்பட்ட மழை நீர்
பெற்று கலந்து விடுவது
போல உன் உள்ளமும்
என் உள்ளமும்
இரண்டற கலந்து
விட்டென॥

இனி நம்மை
பிரிக்க முடியாது
சில வேளை
விதி பிரித்தால்
அந்த விதியையும்
வெல்ல
உலகத்தை விட்டுப்
பிரியவும் அஞ்சோம்॥

ஒரு சொல் கவிதை

ஒரு சொல்லில் கவிதை கேட்டால்
'அம்மா' என்பேன்,
கேட்பது அம்மாவாக இருந்தால்
இன்னும் சுருக்கமாகக் கூறியிருப்பேன்,
'நீ' என்று

பெண்ணே

பெண்ணே
நீ ஒரு பார்வை பார்த்தாய்
அது என் நெஞ்சில் முள்ளாக குத்தியது
எங்கே இன்னொரு முறை பார்.
முள்ளை முள்ளால் தானே எடுக்க முடியும்

நாயகியே நீ எனக்கு

நட்பெனும் தேரிலேறி நடை பயின்று வந்த நீ.
உள்ளமெனும் கோயிலிலே ஓர் நிலவாய் உறங்கி விட ,
நன்றி சொல்லி நான் உனக்கு பூ மாலை சூட்டி விட்டால் ,
நாயகியே நீ எனக்கு .............

இன்னொரு காதல்....

வருடப்பிறப்பு அன்று கோயிலில்
திருவிழாக் கால மக்கள் திரளுள்
கருவிழியாள் உன் பார்வையால்
அரும்பியது என்னுள் காதல்

தைப்பொங்கல் வரும்வரையில்
தையலுன் பின்னால் தினமும்
அலைந்த என் காதலுள்
தொலைத்தாய் உன் இதயத்தை

மாசி வந்ததும் நாமிருவரும்
பேசி பேசி காதல் செய்தோம்
பங்குனி மாதத்தில் உன்
சங்கு கழுத்தில் முத்தமிட்டேன்

சித்திரை மாதம் வந்ததும்
நித்திரையின்றி புரண்டேன்
வைகாசி பூத்ததும் நாமிருவரும்
கைராசி பார்த்து சந்தோசப்பட்டு

ஆனி வந்ததும் உல்லாசமாக
தேனீக்கள்போல பறந்து திரிந்து
ஆடி வந்ததும் இருவரும்
பாடி மகிழ்ந்தோம் ஒருவருக்கொருவர்


ஆவணி உதித்ததும் உனக்கு நான்
தாவணி வாங்கி தந்து அழகுபார்க்கையில்
புரட்டாதியும் வந்தது நமக்குள்
புரட்சி வந்து வரட்சியானது நம்காதல்

ஐப்பசி வெகுவிரைவில் வந்தது
பப்பாசிப்பாலாக கசந்தது நம் உறவு
கார்த்திகை பூக்க தொடங்கையில்
பூர்த்தியானது நம் தொடர்பு

மார்கழி முடியும் வேளையில் எனக்கு
மூர்க்கம் வந்தது காதல் மேல்..
சந்தோசமாக மலர்ந்த காதல்
சந்தேகத்தால் உதிர்ந்தது.

மீண்டும் வருடம் பிறந்தது
கண்டேன் பல பெண்களை ஆனாலும்
வேண்டாம் எனக்குள்
இன்னொரு காதல்....

ஞாயிறு, 1 மார்ச், 2009

இறுதிப் பயணத்திலாவது.....

எனன்வளே
உன் பார்வைக்கு
நான்
பொதிசுமக்கும் கழுதைதான்
ஆம்
உதைக்கத்தெரியாமல்
உன்
நினைவுகளை மட்டுமே
சுமக்கத்தெரிந்த......

மறந்து விட்டாயா.........?

கண்களால் கைது செய்து
காதல் விதை விதைத்தவளே...
ஏழேழு ஜென்மமும்
உன்னோடுதான் என்றாயே....
இன்பத்திலும் துன்பத்திலும்
என்னோடு உறவாடியவளே....
காலம் மாறினாலும் - என்றும்
மாறாதது நம் - காதல்
என்றாயே......!


வெற்றி நிச்சயம்

ஏய்
இளைஞனே!
நமக்குத்தான்
துயில் எழுப்புவதற்கு
சேவல்
கடிகாரம் எல்லாம்......
அந்த சூரியனுக்கேது?
கண்களில் முயற்சி
கைகளில்
நம்பிக்கை
மனதில்
இலட்சியம்
வேண்டும்!

வேதனைச் சுமைகள்

இன்று போலிருக்கிறது
நண்பிகளுடனான
எனது
இறுதிச் சந்திப்பு
உறவு முறிந்து
கண்ணீர்த் துளிகளால்
கவி வடித்து
நண்பிகளிடம்
காட்டி
சந்தோசமடைந்த
அந்த அனுதாப
நாட்களை
சொல்லிவிட முடியாமல்
அடக்கி வைத்த
நாள்!
சிட்டுக் குருவிகளாய்
சிறகடித்த நாள்!
அதுதான் அந்த
வேதனை நாளும்.

சனி, 28 பிப்ரவரி, 2009

ஓவியக் காதல்





காயவலி

புண் வந்த காயம்
ஆறாது
வலி
நீடிக்கும்
காயங்களின்
வலி
எல்லோருக்கும்
புரியப் போவதில்லை.
இரவுத் தூக்கம்
தொலைந்து
அனுகி அனுகி
புரண்;ட படுக்கை
என் அகராதியில்
ஏடு என்பதை
யாராலும் மறுக்க முடியாது
பருவச் சுமைதான்
புண் வந்த காயம்
வலிப்பு
வரதட்சணையின் வேதனை
காயமும் வலிப்பும்
இனி.....

கல்லறை காயாது


சிரித்தபடியேதான் நீ
சாவையும் சந்தித்திருப்பாய் என்பதில்
சந்தேகமில்லை எமக்கு.
சமர்க்கள வீச்சாயினும்
சமாதானப் பேச்சாயினும்
இரண்டிலும்-
சலவை செய்த உன்
சிரிப்பைச் சந்திக்க
எதிரிகளே அஞ்சினார்கள்.
உன்-புன்னகையின் வெண்ணிறமே
புரட்சியின் விடிவெள்ளியாய்த்
தோன்றியது

கனவெல்லாமே.....


உன்னை நேசிக்கிறேன்
என்றதற்கு
நானும்.... உ...ங்...க...ளை
என்று நீ
இழுக்கும்போதே
வளைந்துவிட்டேன்
உன்பக்கம்....

அப்போது நினைத்தேன்
நீ
எனக்காக பிறந்தவள்
என்னைப் புரிந்தவளென்று
ஓர்நாள்
புரிந்த நீயே
எனக்கு
புதிராகிப்போனாய்......

மனம்
மாறக்கூடியது
காதல்
மாறாதது
எப்போதும்
மாறக்கூடிய மனதில்
ஒருபோதும்
மாறாக்காதல்
என்ன ஆச்சாயம்
மனதை
நிலைப்படுத்தும் காதல்
மங்கையவளை.......

காதலில்
முரண்பாடிருக்லாம்
எனக்கு
காதலியே
முரண்பாடாய்....

காதலில்
முரண்பாடுகளுக்குத்தான்
முக்கியத்துவம் போலும்....


உனக்காக இருக்கவா..? உன்னோடு இருக்கவா..?


உனக்காக இருக்கவா..?
உன்னோடு இருக்கவா..?
என்றால்

உனக்கா எழுதிக் கொண்டு
உன்னோடு இருக்கவே
விரும்புகிறது மனசு

*

நியமாக உன்னோடு
வரமுடியாமல்
போனாலும்

என் நிறமாவது
வருகிறதே
உன் நிழலாக


*
நீ
பயத்தோடு
வருவதைக் கண்டாலே

நான்
தனியா பேச வந்ததை
மறந்து விடுகிறேன்

*

நீ
படபடப்பதை
யாரும் பார்த்தால்
பயத்தை விரும்பும்
கோழை என என்னை
நினைக்கப் போறார்கள்

*

நீ என்னைக்
காதலிக்கிறாய்
என்பதை

என்னால்
நம்பமுடியாமல்
இருக்கிறது

பொறுக்கியை
எப்பிடி தேவதை
காதலிக்கும்..?

வெள்ளி, 6 பிப்ரவரி, 2009

கண்கள் உனைக்கண்ட நாள் முதலாய்












கண்கள்
உனைக்கண்ட நாள் முதலாய்
காத்திருந்தேன் உன் நட்புக்காக
எத்தனை இரவுகள் ஏக்கமாய் கழிந்தன
தெரியுமா உனக்கு

உன்னோடு ஒருவனைப் பார்த்தால்
உள்ளம் ஊமையாய் அழுதது
நட்பினாலா காதலினாலா
விடை தெரியா வினாக்கள்
என்னுள் விளையாடி ஒய்ந்தன

என்னுள்ளத்தை எனக்கு வெளிச்சமிட்டது
உந்தன் வெட்கம் தானடி
நான் தீர்மானித்து விட்டேன்
என்னுள் இருப்பது நட்பல்லவடி
அது நிச்சயமாய் காதல் தான்

உன்னிடம் என் காதலைச் சொல்ல
ஓராயிரம் தடவை முயன்று விட்டேன்
விளைவு விபரீதம் ஆகி
உன் நட்பும் என்னை பகைத்து விட்டால்
முயற்சி எனக்குள்ளேயே முடங்கிக் கொண்டது

யாரும் அறியாமல்
ஒப்புக்கொள்கின்றேன் நான் கோழைதான்
ஏங்கித் தவிக்கின்றேன் என்றாவது ஒருநாள்
என் எண்ணம் உன்னை எட்டும்
அன்றுதானடி நான் பிறந்த பயனை அடைந்த நாள்
காத்திருக்கின்றேன் அந்த நாளுக்காக
பூக்குமா என் வாழ்விலும் வசந்தம்